கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம்தேதி தொடங்க அனுமதி: தமிழக அரசு


தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் கல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் தொடக்கம். உள் அரங்கில் 200 பேருக்கு மிகாமல் அரசியல் சமுதாய கூட்டங்கள் நடத்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறுவது அவசியம்.