தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிப்பு


கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், ரெயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.இதனிடையே செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும், டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.