25th September 2021

காய்கறி விற்பனையில் சாதிக்கும் பட்டதாரிகள்!

மதுரை: மதுரை அருகே உள்ள நாகமலைப்புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் சுபாஷ், முத்துமணி, இசாக் அகமது மற்றும் அருண்குமார். இவர்கள் இணைந்து காய்கறி விற்று வருகின்றனர். செக்காணூரணி, திருமங்கலம் ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகளிடமிருந்து இவர்கள் நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். நாகமலை, ஆலம்பட்டி, ராஜம்பாடி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று காய்கறிகள் விற்கின்றனர்.மேலும், என்ஜிஜிஓ காலனி பகுதியில் சாலையோர கடை அமைத்தும் காய்கறிகளை விற்று வருகின்றனர். இதில் இளைஞர் சுபாஷ், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்திருக்கிறார். அருண்குமார், எம்.காம் (சி.ஏ), முத்துமணி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்துள்ளளனர். இசாக் அகமது, இளங்கலை வணிகவியலில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவர்கள் கூறியதாவது: இயற்கையான, பசுமையான உணவு முறையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், நண்பர்களான நாங்கள் சேர்ந்து ‘மீனாட்சி பசுங்காய்கனி அங்காடி’ பெயரில் காய்கறி விற்பனையைத் தொடங்கியுள்ளோம். மக்களுக்கு சந்தை விலையை விடக் குறைவாகவும், தரமானதாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளிடமே நாள்தோறும் நேரடியாகச் சென்று வாங்கி வருகிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. தக்காளி, உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், முட்டைக்கோஸ், முருங்கை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன், அந்தந்த பருவத்தில் கிடைக்கும் கொய்யா, மாம்பழம், நெல்லி உள்ளிட்ட கனிகளையும் விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்கள் போனில் அழைத்து கூறுவதை குறித்துக் கொண்டு அடுத்த நொடி வீட்டிற்கே சென்று வழங்கி விட்டு வருகிறோம். இதற்கு தனியாக கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

கொரோனா ஊரடங்கில் காய்கறிகள் கடுமையான விலையேற்றம் கண்டது. ஆகையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது உதயமானதுதான் இந்த விற்பனை குறித்த சிந்தனை. எங்களின் இந்த முயற்சிக்கு திருமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி அன்னவயல் காளிமுத்து வழிகாட்டினார். நாங்கள் விற்பனை செய்கின்ற காய்கறிகள் அனைத்தும் இயற்கை முறையில் விளைந்தவை இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் குறைந்த விலையில் கீரை வகைகளை வழங்குவதற்காக இவர்கள் தற்போது மேலக்குயில்குடி அருகே அரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிர் போட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இளைஞர்கள் ‘தமிழ் வனம்’ என்ற அமைப்பின் மூலம் நாகமலையிலிருந்து ஆண்டிப்பட்டி வரை கடந்த 2019 துவங்கி தொடர்ந்து மரக்கன்றுகளும் நட்டு வருகின்றனர். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த இளைஞர்கள் அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றனர்.

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page