காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம்

வல்லாரை இலை உத்தாமணி இலை மிளகு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து பருகினால் காய்ச்சல் குணமாகும்.

வேலிப் பருத்திச் செடியின் இலையை அரைத்து இரண்டு தேக்கரண்டி சாறு எடுத்து சம அளவு தேன் கலந்து கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் விட்டவுடன் முதலில் தலைக்கு நீர் விடும் போது ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்துக் கொண்டு பின்னர் நீர் விட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

கோரைக் கிழங்கை காய்ச்சி கசாயம் குடித்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
திருநீற்றுப் பச்சிலையை கசக்கி சாறு பிழிந்து முக்கில் நுகர தும்மல் வரும் அதன்மூலம் மூளைக் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகள் வெளியேறி விடும்.

துளசி இலை, வில்வ இலை,வேப்ப இலை, கடுக்காய், சந்தனகட்டை, மிளகு, சித்தரத்தை ஆகியவற்றை அரைத்து வெயிலில் காயவைத்து பதப்படுத்தவும்.காய்ச்சல் வரும்போது காலை மாலை 1/2கரண்டித் தூளை வெந்நீரில்போட்டு கலக்கி குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

திருநீற்றுப்பச்சிலை சாரு தும்பை இலைச் சாறு சிறிதளவு கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்சினால் மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

நாரத்தை இலைகளை கஷாயம் செய்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்
செம்பருத்தி பூக்களை 5 சுத்தமான நீரில் காய்ச்சி கால் பங்காக வற்றியபின் அதனை மூன்றுவேளை பருகினால் உஷ்ண ஜீரம் குணமாகும்.

மிளகு திப்பிலி சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தேனில் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும் .

கடுகு ரோகினி பற்பாடகம் விஷ்ணுகிரந்தி இலை சுக்கு இலைகளை வகைக்கு 20 கிராம் எடுத்து நன்றாக இடித்து தண்ணீரில் ஊற்றி காய்ச்சி கசாயம் இட்டு பசும்பால் சேர்த்து காலை மாலை வேளைகளில் காய்ச்சல் அஜீரணம் குணமாகும்.

ஈரப்பசையுடன் உள்ள முற்றிய வேப்ப மரத்தின் பட்டையை உரலில் போட்டு இடித்து கால்பங்கு சீரகப் பொடி கலந்து பசும் பாலில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

குளிர் ஜன்னி காய்ச்சல் ஏற்பட்டால் துளசியின் சாறில் சிறிது உப்பை சேர்த்து சுடவைத்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை பருகி வந்தால் குணமாகும்

மலேரியா காய்ச்சல் ஏற்பட்டால் துளசி சாறு இஞ்சி சாறு இரண்டையும் சம அளவு எடுத்து தேன் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் குணமாகும்

இன்புளூயன்சா காய்ச்சல் ஏற்பட்டால் காய்ந்த துளசியை ஒருரூபாய் எடை எடுத்து 100 மில்லி நீரில் ஊறவைத்து 12 மணி நேரம் கழித்து வடிகட்டி நாள் ஒன்றுக்கு மூன்று வேளை கொடுத்து வந்தால் குணமாகும்.

ஜன்னி பாத காய்ச்சல் ஏற்பட்டால் வங்காரம் கிராம்பு இரண்டையும் கொதிக்க வைத்து ஒரு பாலாடை அளவில் இரண்டு துளசி துளசி சாற்றை சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாவதுடன் வயிறு உப்பசம் காசம் ஆகியவை குணமாகும்.

விஷஜீரம் வந்தால் ஒரு ரூபாய் எடையுள்ள துளசி சாற்றில் 5 மிளகை தூள் செய்து கலந்து சாப்பிடவும் என்னை புளி மிளகாய் கூடாது.

காய்ச்சல் வரும் என்று தோன்றினால் கருந்துளசி சுக்கு நாட்டுச்சக்கரை இவற்றை லேகியம் போல் தயாரித்து சாப்பிடவும் எண்ணெய் புளி மிளகாய் சேர்க்கக்கூடாது

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page