மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் புதிதாக பேருந்து நிறுத்தம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான எஸ். பவுன்ராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருண், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் ஆர். சுந்தரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், வேளாண் கூட சங்கத் தலைவர்கள் கபடி பாண்டியன், கண்ணன், முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.