வேர்க்கடலை சட்னி


தேவையான பொருட்கள்:-
வேர்க்கடலை – 1/2 கப்பு
காஞ்ச மிளகாய் – 8-10
சின்ன வெங்காயம் – 4-5
பூண்டு – 4-5
தேங்காய் துருவல் – 1/4 கப்பு
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
1. ஒரு கடாயில் 1/2 கப்பு வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து தோலுரித்துக் கொள்ளவேண்டும்.
2. பின் ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அது சூடான பின் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. பின் சின்ன வெங்காயம் பூண்டு மற்றும் காஞ்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. 1/4 கப்பு தேங்காய் துருவல் சேர்த்து வத்கவும்.
5. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
6. வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.
7. வேர்க்கடலை கலவையை நன்கு குளிர்ந்த பின் நன்கு அரைத்து கொள்ளவேண்டும்.
8. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சேர்க்கவும்.
9. பின் காஞ்ச மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் சேர்க்கவும்.
சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி