குஜராத்: ரசாயன ஆலையில் தீ விபத்து

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இயங்கிவந்த தனியார் ரசாயன ஆலையில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.காற்றின் வேகம் காரணமாக அருகிலிருந்த நான்கு ஆலைகளுக்கு தீ பரவியதால், அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் இயங்கிவந்த தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த ரசாயன ஆலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு ஒரு மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தை அருகில் பணிபுரிந்து வந்த கட்டுமானப் பணியாளர்கள் கண்டு தகவல் அளித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட சிறுது நேரத்தில் அருகிலிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.காற்றின் வேகம் காரணமாக அருகிலிருந்த 4 ஆலைகளுக்கும் தீ பரவியதால், அதனை அணைக்கும் பணியில் 40க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SOURCE

More News

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts