26th November 2020

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருவே சிவம் நூல் வெளியீட்டு விழா

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருவே சிவம் நூல் வெளியீட்டு விழா.

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திரு மன்றம் சார்பில் தொகுத்து அளித்த “குருவே சிவம்” என்ற ஆன்மீக நூலை மயிலாடுதுறை அருள்மிகு ஞானாம்பிகை சமேத அதான் ஈஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள, மேதா தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தருமபுரம் ஆதீன இளைய குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் நூலை வெளியிட முதல் பிரதியை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் பெற்றுக்கொண்டார். விழாவில் தருமபுரம் ஆதின கல்லூரி செயலாளர் டாக்டர் எம்.திருநாவுக்கரசு, மயிலாடுதுறை வர்த்தக சங்க தலைவர் சி.செந்தில்வேல், நாகை வடக்கு மாவட்ட வணிகர் பேரவையின் தலைவர் எம்.என்.ரவிச்சந்திரன், பொருளாளர் பாண்டுரங்கன், இணைச் செயலாளர் ஜெயக்குமார், வணிகர் பேரமைப்பின் துணைத் தலைவர் சிவலிங்கம், காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன், வேதபாடசாலை முதல்வர் ஏ.வி.சாமிநாத சிவாச்சாரியார், வள்ளலார் கோயில் அர்ச்சகர் மற்றும் ஸ்ரீகண்ட சிவாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply