குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகரத்துக்கு பெயர்ச்சி


நவகிரகங்களின் குருவாக போற்றப்படும், குருபகவான், ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு தங்குகிறார். பிறகு, அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதன்படி இந்த ஆண்டு ஆட்சி வீடான தனுசு ராசியில் இருந்த குருபகவான், இரவு 9.48 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதையொட்டி பிரதான குரு ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெற்றன. அந்த பூஜைகள் இணையத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
குருப்பெயர்ச்சியால், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை குருபகவான் அளிப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. குருபெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு ஸ்தலங்களில் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றன.