26th November 2020

நாகப்பட்டினம் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (14.10.2019) மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்.பி.நாயர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 17 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 308 மனுக்கள் என மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்.பி.நாயர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏலாச்சி என்பவர் கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட சுனாமியின் போது உயிரிழந்ததையொட்டி, அவரது வாரிசுதாரர்களின் பெயரில் பாரதப் பிரதமரின் குழந்தை உதவித் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகையாக வைக்கப்பட்ட தலா ரூ.51,000 தொகை, தற்போது பயனாளிகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்ததையொட்டி, வைப்புத்தொகையின் விடுவிப்பு ஆணைகளை உயிரிழந்தவரின் வாரிசுதாரர்கள் வெற்றிவேல், நந்தினி ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்.பி.நாயர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) கே.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply