25th September 2021

புதிய மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு !!

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் சைவ சமயத்தை வளர்க்கவும், மக்களிடம் சைவக் கருத்துக்களை பரப்பவும் திருஞான சம்பந்தரால் இந்த ஆதீனம் உருவாக்கப்பட்டது. இவருக்குப் பிறகு ஒவ்வொரு குரு சீடர்கள் மூலம் இந்த ஆதீனம் வளர்ச்சியை கண்டது. 292ஆவது குரு மகா சன்னிதானமாக இருந்த அருணகிரிநாதர், தனக்குப் பிறகு இளைய சன்னிதானமாக திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தாவை நியமித்தார். இதில் சில சர்ச்சைகள் ஏற்பட்டதால் பின்னர் அவரை நீக்கினார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இதற்கிடையில் தற்போது சுந்தரமூர்த்தி தம்பிரான் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டில் இளைய மடாதிபதியாக நியமித்து, பட்டமும் சூட்டியதாகவும், இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் எனவும் மதுரை ஆதீனம் நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.

அதாவது திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்து அவரை ஆதீனமாக உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீன மடத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இதனால் இப்பொறுப்புக்கு முக்கியத்துவம் உண்டு என்றும் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page