14th April 2021

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 471 ஆக உயர்வு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, இன்று காலை 9 மணி நிலவரப்படி, 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 503 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 471 ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 609 ஆகவும் உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில், தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்தை கடந்துள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.இதனிடையே, நேற்று வரை 1 கோடியே 18 லட்சத்திற்கும் பரிசோதனைகள் (1,18,06,256)செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 103 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

source

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply