அல்சர் குணமாக- பாட்டி வைத்தியம்

அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் என்னவென்றால் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த அல்சர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக நம் பாட்டி வைத்தியம் சிறந்து விளங்குகிறது.

அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும், சாப்பிடும் உணவு முறைகளில் அதி கவனம் செலுத்த வேண்டும். காலை, மதியம், இரவு இந்த மூன்று வேளையும் சரியான நேரத்துக்கு உணவு அருந்த வேண்டும். பொதுவாக நமது மனம் ஆரோக்கியமாக இருந்தாலே நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே மனதை எப்பொழுது மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அல்சர் அறிகுறிகள்:

1. அடிவயிற்று வலி

2. குமட்டல்

3. திடீர் எடை குறைவு

4. இரத்த வாந்தி

5. ஏப்பம்

6. வயிற்று உப்புசம்

7. கருப்பு நிற மலம்.

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம்: அல்சர் முற்றிலும் குணமாக  அல்சர்

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் வாரத்தில் மூன்று முறையாவது இந்த மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி செய்யும். பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை (ulcer) சரி செய்ய உதவுகிறது. தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது. தேங்காய் பால் பிடிக்காதவர்கள் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.

வீட்டில் இருந்து தயார் செய்த ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஆப்பிள் ஜூஸை கடைகளில் வாங்கி அருந்த கூடாது, வீட்டில் தயார் செய்து மட்டும் அருந்தவும். பழுத்த பாகற்காயை தினமும் சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. தண்டு கீரையில் இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளதால், இவற்றை தினமும் உணவில் சேர்த்து வர உடலானது குளிர்ச்சி அடைந்து மூல நோய் மற்றும் குடல் புண் சரியாகிறது. தினமும் முட்டை கோஸ் சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அகத்திக்கீரை சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அகத்திக்கீரையை சூப் செய்து கூட குடிக்கலாம். தினமும் புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் அருந்தி வர, அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அல்சர் குணமாக வைத்தியம், துளசி இலை சாறுடன் சிறிதளவு மாசிக்காயை சேர்த்து வாரத்தில் இரண்டு முறை அருந்தி வர, குடல் புண், வாய் புண் போன்றவை சரியாகும். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வர அல்லது ஜூஸ் செய்து அதனுடன் தயிர் கலந்து அருந்தி வர அல்சர் பிரச்சனையை சரி செய்திட இயலும். அல்சர் குணமாக வைத்தியம் அத்திமரம் பட்டை சாறுடன் சம அளவு பசும் பால் மற்றும் சிறிதளவு கல்கண்டு சேர்த்து 100 மில்லி அளவு தினமும் அருந்தி வந்தால் அல்சர் பிரச்சனையை சரி செய்திட முடியும். அத்தியிலை சாறுடன், சம அளவு வேப்பிலை சாறு சேர்த்து தண்ணீர் கலந்து காய்ச்சி தினமும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும். அல்சர் பிரச்சனையை சரி செய்வதற்கு சீரகம், அதிமதுரம், தென்னம்பாளை பூ மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பசும்பால் சேர்த்து அரைத்து சிறிய எலுமிச்சை அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். பின்பு இவற்றை பாலில் கலந்து தினமும் அருந்தி வர அல்சர் பிரச்சனை குணமாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மது அறுந்து பழக்கத்தை முற்றிலும் தவித்து கொள்ள வேண்டும். டீ, காபி, கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் பாலில் உள்ள புரதச்சத்து மற்றும் கொழுப்பு சத்து வயிற்று புண்ணிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதாவது பால் வயிற்றில் அமில தன்மையை அதிகரிக்கும்.

 

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts