மயிலாடுதுறையில் புயல் காரணமாக, கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்.பவுன்ராஜ் நேரில் சென்று ஆய்வு


குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடவிளாகம் ,முத்தூர், புதுநகர் தோப்பு தெரு, கிளிமங்களம் மேட்டுத்தெரு, மேலத்தெரு, கடக்கம், அகர ஆதனூர் வடக்கு தெரு, அகரவிச்சூர் மெயின்ரோடு நடுத்தெரு, மேட்டுதெரு புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கடுமையான மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் ஒன்றிய அலுவலர் ரெஜினாமேரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உடனிருந்தனர்.