1st August 2021

அரசு அலுவலகங்களில் பிரதமர், குடியரசுத்தலைவர் படம் குறித்து உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் படங்களுடன், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்கவேண்டும் என 1978 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் படங்களை வைக்க உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 1990 ஆம் ஆண்டு அம்பேத்கர் படமும், 2006 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி, காயிதே மில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர், தமிழன்னை புகைப்படங்கள் வைக்க அனுமதித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது’. என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதும், இந்த படங்களை வைக்க வேண்டும் என அந்த அரசாணையில் கட்டாயப்படுத்தப்படவில்லை’. எனத் தெரிவித்தார்.

தலைமை வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என அரசாணை கட்டாயப்படுத்தாத நிலையில், பிரதமர், குடியரசு தலைவர் படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Source: தி இந்து தமிழ்

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page