24th November 2020

மாயவரத்திற்கு ஓடி வரும் புண்ணிய நதிகள் முழுக்குத் திருவிழாவின் சிறப்பு

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கிறர் இதனாலேயே இது துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. துலா என்றால் தராசு என்றும் பொருள் படும் ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும். இதனாலேயே இது துலா மாதம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தூலமாதமாக ஐப்பசி பிறக்கிறது. இந்த மாதத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து போன்ற நதிகள் எல்லாம் நமது காவேரி நதிக்கு வந்து தமது பாபங்களை போக்கிக் கொளவதாக ஐதீகம். ஒரு முறை கங்கா நதி பிரம்மாவிடம், எல்லோரும் தன்னிடம் வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதுபோல தான் எங்கே போய் தனது பாபங்களைப் போக்குவது என்று கேட்க, பிரம்மாவும், கங்கை முதலான எல்லா நதிகளும் துலா மாதத்தில் காவேரிக்கு சென்று தமது பாபங்களை களையலாம் என்று கூறினாராம். இந்த ஐப்பசி மாதத்தில் மஹா நதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாப விமோசனம் அருள்கிறாள் காவேரி. இந்த மாதத்தில் காவேரி நதியில் குறைந்த பக்ஷமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர் ஆன்றோர். காவேரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்போன்றலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு.

மயூரத்தில் துலா நீராடுதல்:

ஐப்பசி மாதத்தில் மாயூரம் என்றழைக்கப்படும் மயிலாடுதுறையில் காவேரி நதிக்கரையோரம் உள்ள நந்திக்கட்டத்தில் கங்கையானவள் நீராடுகிறாள். மேலும் பாரதத்தில் உள்ள அனைத்து நதிகளும் அங்கு நீராடி, தங்களிடம் மக்கள் தொலைத்துச் சென்ற பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதனால் தானே என்னவோ ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா? என்றொரு பேச்சு வழக்கு உள்ளது. இத்திருத்தலத்தில் ஐப்பசி இறுதியில் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி மிகவும் சிறப்புடையது.

கடைமுழுக்கு தீர்த்தவாரி:

ஐப்பசி மாத அமாவாசை அன்று காவேரி நதியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். அன்று காவேரியானவள் கங்கையாக மாறுகிறாள். என்று காவேரிபுராணம் உரைக்கின்றது. அன்று மறைந்த முன்னோர்களுக்கு காவேரி நதிக்கரையில் நீர்க்கடன், தர்ப்பணம், வழிபாடுகள் செய்ய உகந்த நாள் என்பார். ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும். அமாவாசை போன்ற நாட்களில் மிக சிறப்பு. தென் மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் கூட, காவிரிக்கரை சார்ந்த கேஷத்திரங்களுக்குச் சென்று சில தினங்கள் தங்கி இந்த ஸ்னானத்தை சங்கல் பத்துடன் செய்வது வழக்கம். பிரயாணிக்க இயலாத பெரியோர்கள் தாங்கள் தினமும் நீராடும் நீர்நிலைகளில் காவேரியை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்து நீராடுகின்றனர். ஐப்பசி கடைசி நாளில் ஸ்னானம் செய்வதை கடை முழுக்கு என்கிறார்கள். மயிலாடுதுறையில் இருக்கும் சைவ, வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடை முகத்தன்று தீர்த்தவாரி செய்திருளுகிறார்கள்.

முடவன் முழுக்கு:

ஒரு சமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்னானம் செய்ய நினைத்து, மயூரத்திலிருந்து வெகு தூரம் இருக்கும் ஓர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான்.அவன் தனது உடல் குறை பாட்டின் காரணமாக நிதானமாக வந்து மயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும், முடிந்து கார்த்திகை ஆரம்பித்துவிடுகிறது. தன்னால் துலா ஸ்னானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி பிராத்திக்கிறேன். அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிறங்கி இன்றைய தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவியில்லை. காவேரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்னானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்னானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் முடவன் முழுக்கு என்று பெயர் பெற்றது.

More News

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts