20th September 2021

கொங்கணரின் வரலாறு!

கொங்கணர், கேரளத்தின் கொங்கண தேசத்தில் காட்டுப் பகுதியில் பிறந்தவர். வேடர் பரம்பரையில் பிறந்தவர். சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்.

அவருக்கு திடீரென ஞானம் ஏற்பட்டது. யாரிடமும் சொல்லாமல், காட்டைவிட்டு வெளியேறி நாட்டிற்கு நுழைந்தார்.

உலக மக்கள் ஆசையில் மூழ்கி, செல்வத்தின் பின் ஓடுவதை கண்டு தானும் இவர்களைப் போல் செல்வத்தின் பின் செல்லாமல் பற்றின்றி வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.

ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்தார். திருவாவடுதுறைக்கு வந்தார். அங்கு போகரை சந்தித்தார். அவரை குருவாக ஏற்றுக்கொண்டார்.

போகர் கூறினார். ” நீ கொங்கண தேசத்தில் சேர்ந்தவன் என்பதால் உன்னை கொங்கணர் என்று அழைப்பேன். அட்டமா சித்திகளை அடைய நீ விரும்பி வந்துள்ளாய் அவை உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் என்று நம்புகிறாய். அஷ்டமாசித்திகள் மனித குலத்திற்கு பல பயனுள்ள அவற்றை செய்யவும் பயன்படும். அம்பிகையின் பல வடிவங்களை தரிசிக்க நீ எண்ணுகிறாய். அஷ்டமாசித்திகளை கற்று அவற்றில் ஒன்றின் மூலம் அம்பிகையை தரிசனம் செய்யலாம் என்று நினைக்கிறாய். அம்பிகையை நேரில் காண ஒரேவழி தவம் செய்வதுதான். மனிதர்கள் இல்லாத இடத்திற்கு சென்று அங்கே தவம் செய். அம்பிகை உனக்கு தரிசனம் கொடுக்கலாம்” என்று ஆசி கூறினார்.

குருவின் உபதேசம் கிடைத்ததால் ஒரு மலை மேல் ஏறி அதன் உச்சிக்கு சென்று படுத்துக்கொண்டு, அம்பிகையை நினைத்து, மந்திரங்கள் கூறி கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தார். போகர் கூறியபடியே, அம்பிகையின் பல வடிவங்களை தரிசனம் செய்தார். தன்னுடைய சக்தி அதிகரித்தது போல் அவருக்கு தோன்றியது.

அப்போது, கௌதம முனிவர் அங்கு வந்து “கொங்கணரே , நீ அவசரப்பட்டு அம்பிகையின் ஒரு சில வடிவங்களை பார்த்ததும் உன் சக்தி அதிகரித்து விட்டதாக நீ நீயாகவே நினைத்துக் கொண்டு, தவத்தைக் கலைத்து விட்டாய். அம்பிகைக்கு பல வடிவங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டாய். எனினும் மறுபடியும் தவம் செய்ய அவற்றை காண்பாய்” என்று கூறிச் சென்றார்.

கொங்கணர், மறுபடியும் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால் அந்த தவம், சிறிது காலமே நீடித்தது. சித்திகளை அடைய வேண்டும் என்ற மன உணர்வு தவத்தை கெடுத்துவிட்டது.

கொங்கணர் அங்கிருந்து புறப்பட்டு தில்லையான சிதம்பரத்தை அடைந்தார். அங்கு மறுபடியும் யாகம் செய்ய ஆரம்பித்தார். அஷ்டமா சித்திகளை அடைய வேண்டி யாகம் செய்யத் தொடங்கினார்.

அப்போது மறுபடியும் கௌதம முனிவர் அவர் முன் தோன்றினார். கொங்கணா நீ மீண்டும் தவறு செய்கிறாய், அஷ்டமா சித்திகளை பெற்று உனக்கு பலன் எதுவும் கிடைக்காது. நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற ஆணவம் வளரும். தவமே சிறந்த உயர்ந்த பாதை. தவம் என்றால் கண்களை மூடிக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து இருப்பது என்று பொருள் அல்ல. உண்மைப் பொருளைப் புரிந்துகொள்ள உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என சொல்லி சென்றார் .

இதனால் கவலை கொண்டார் தவத்தின் பொருள் தெரிய எப்போது சந்தர்ப்பம் வரும் என்று தெரியவில்லையே என்று காத்திருந்தார்.

ஒருமுறை தியானத்தில் இருந்த கொங்கணர் மீது உயரே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று எச்சம் இட்டது. கோபமடைந்த அந்த பறவையை பார்த்தால் அவருடைய பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் கொக்கு எரிந்து சாம்பலாகி விட்டது. இதனால் கொங்கணருக்கு அகந்தை ஏற்பட்டது.

சில காலத்திற்குப் பின் அவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி அவள் கணவருக்கு உணவிட்டு கொண்டிருந்தால் பிச்சையிட சிறிது காலதாமதம் ஆகிறது.

அந்த பெண்மணியை பார்த்து கொங்கணர் முறைத்தார். அந்த பெண்மணி கேட்டாள் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா”. அவ்வளவுதான் அவருடைய அகந்தை அழிந்து கொக்கை எரித்ததை இப்பெண்மணி எப்படி அறிந்தாள். அந்த பெண்மணி பேசினாள் ” ஒரு பெண் இறைவனை அடைய தவம் செய்ய வேண்டியதில்லை, பூஜை, புனஸ்காரம் கூட தேவையில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதே ஒரு பெண்ணிற்கு உரிய உயரிய தவம்.

என்னையும் விட ஒரு உயர்ந்த தபஸ்வி, அடுத்த ஊரில் உள்ளார். அவர் இறைச்சி கடை வைத்திருக்கிறார். அவர் பெயர் தர்மவியாதன். அவர் வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்பது போல் நடித்து தன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்றாள். தவம் என்றால் என்ன என்பது பற்றி தானே உங்களுக்கு சந்தேகம் அவரிடம் சென்று அறிந்து கொள்ளுங்கள்.

ஆனால் அவர் சடாமுடியும் தாடியுமாக தவத்தில் இருக்க மாட்டார். சாதாரணமாக இருப்பார் என்று கூறி அவரை அனுப்பி வைத்தாள்.

அகங்காரம் நீக்கிய கொங்கணர் அடுத்த கிராமத்திற்கு சென்றார்.

பக்கத்து கிராமத்தில் அந்த இறைச்சி கடைக்கு போன அவரை அந்த இறைச்சிக் கடைக்காரர் “கொக்கை எரித்த கொங்கனரே, அம்மையார் உம்மை அனுப்பினாரா, சற்று பொறும், என் வீட்டிற்குப் போவோம்” என்று கூறிவிட்டு வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவரை அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு சென்று உட்கார வைத்து விட்டு தன்னுடைய பெற்றோர்களை குளிக்க வைத்து உணவு கொடுத்து விட்டு மறுபடியும் கொங்கணரிடம் வந்தார்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கொங்கணரிடம், பெற்றவர்களுக்கு சேவை செய்வதே முக்கிய கடமை அதை விட உயர்ந்த தவம் எதுவும் இல்லை என்றார்.

தர்ம வியாதரே, “என் பெயரும், அந்த அம்மையார் அனுப்பியதும், உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டார்”.

தர்மவியாதர் கூறினார். “என்னை பெற்றவர்களுக்கு சேவை செய்வதே, என்னுடைய முக்கிய கடமை அதன் மூலம் நான் இறைவனை அடைந்துவிடலாம். இதுவும் தவம் தான். அந்த தவத்தின் பலனால் எதையும் உணரும் சக்தி எனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனாலேயே தங்களை எளிதில் அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்”.

அப்போதுதான் கொங்கணருக்கு கௌதம முனிவர் கூறியதன் பொருள் புரிந்தது. அவரவர்களும் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வதற்கு சமமானது. இதை அறிய எனக்கு இவ்வளவு நாள் ஆனது என்று நினைத்து அவர் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் நூல்களாக எழுதினார். அம்பிகையின் அருள் பூரணமாக கிடைத்தது.

கொங்கணர் திருப்பதி திருமலையில் கோவில் குளத்தின் தெற்குப் பகுதியில் எட்டாம் படிக்கட்டில் அடக்கம் ஆகியுள்ளார் எனப்படுகிறது.

வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. கேது பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
2. களத்திர தோஷம் எனப்படும் திருமண தடை நீங்கி திருமணம் நடக்கும்.
3. தேவையற்ற பழக்கங்கள் தீய பழக்கங்கள் விலகும்.
4. முன் கோபம் நீங்கும்.
5. ஞாபகசக்தி அதிகமாகும், தியானம் செய்யும் எண்ணம் வரும்.
6. மன வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
7. தீயவர்களின் நட்பு நீங்கும்.
8. உறவினர்களுடன் உறவு வளரும். அதனால் பலம் கிடைக்கும்.

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page