கோரக்க சித்தரின் வரலாறு!

எல்லாம் உன் கையில் தான் உள்ளது

கோரக்கரிடம் ஒரு வணிகர் சென்று வாழ்க்கை நிலையை தாங்கள் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று வேண்டினார். சித்தர் அவரை சிறிது நேரம் அங்கு நடப்பதை பார் என்றார். அப்போது ஒரு இளைஞர் அங்கு வந்தார். கோரக்க சித்தர் போலி சித்தர் என்று அனைவருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவர் அவர்.

அவருடைய கையில் ஒரு பட்டாம்பூச்சி இருந்தது. அதை அவர் கையில் வைத்து மூடி கொண்டு வந்திருந்தார். அவர் சித்தரை பார்த்து இந்த பட்டாம்பூச்சி உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா என்று கூறுங்கள் என்றார். சித்தர் பூச்சி உயிருடன் உள்ளது என்று கூறினால் அதை கையை அழுத்தி கொன்றுவிட்டு அவரை போலி சாமியார் என கூறிவிடலாம், இறந்து விட்டது என்றால் அது உயிருடன் உள்ளது என்பதை நிரூபிக்கலாம் என்பது அவரது நினைப்பு. இதை கோரக்கர் அறிந்து கொண்டார். கோரக்கர் சிரித்துக் கொண்டே அது இறப்பதும் உயிருடன் இருப்பதும் உன் கையில்தான் உள்ளது என்றார்.

வாலிபர் அதிர்ந்துபோய் கிளம்பிவிட்டார். வாலிபர் போனதும் கோரக்கர் வணிகரை அழைத்து இதுபோல்தான் வாழ்க்கைநிலை அதை இறுக பிடித்தாள் வலிக்கும் பொதுநலமாக விட்டால் இனிக்கும். எல்லாம் உன் கையில் தான் உள்ளது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
கோரக்கர் இறப்பு இல்லாத மகாயோகி. பதினெண் சித்தர்களில் ஒருவரான சைவம் என்ற சைவப் பிரிவு நிறுவனரும் ஆவார். இவரை வடநாட்டில் நவநாத சித்தர் என்ற சித்தர் தொகுதியில் தலைமை சித்தராக போற்றுகின்றனர். கோரக்கநாதர் என்பது அங்கு அவரது பெயர் தமிழகத்தில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் நேபாளத்திலும் மிகப் பிரபலமானவர்.

கோரக்கரின் தோற்றத்திற்கு காரணமானவர் மச்சமுனி. அவருடைய வரலாறு:

ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த உமாதேவி கண்ணயர்ந்தாள். சிவபெருமான் கொண்டிருந்த தாரக மந்திரத்தை கேட்டுக்கொண்டிருந்த மீன்குஞ்சு ஒரு மனித உருவம் எடுத்தது. சிவபெருமான் அவருக்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார். மச்சமுனி சித்தர் ஒரு நாள் பிச்சை கேட்டு ஒரு வீட்டிற்கு சென்றார். அவருக்கு பிச்சையிட்ட பெண்மணி சோகத்தில் இருந்ததால் அவரை வணங்காமல் பிச்சை மட்டும் விட்டு விட்டு சென்றாள் .

மச்சமுனி அவளை அழைத்து நீ என்னிடம் ஆசி பெற வில்லையே ஏன் என்றார். அதற்கு அவள் “நீர் என்ன தெய்வமா?” என்று எதிர்கேள்வி கேட்டாள். சித்தருக்கு அவளின் துன்பம் புரிந்தது. அவளுக்கு குழந்தை இல்லை அந்த விரக்தியில் இருக்கிறாள்.

அவர் கூறினார் ” சித்தர்களும் தெய்வ அருள் பெற்றவர்கள் தான் அம்மா என்று கூறினார்.” அவள் கேட்டால் அப்படியானால் எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. அதற்கு அருள் செய்ய முடியுமா என்று கேட்டாள். ஒரு சிட்டிகை விபூதியை நாமம் கூறி அவளிடம் அளித்த சித்தர் இதை நீ உண்பாய் ஆனால் உனக்கு பிள்ளை பேறு கிடைக்கும்.

சாம்பல் என்று நினைக்காதே சிறிது காலம் கழித்து அந்த பாலகனைக் காண நான் வருவேன் என்று கூறிவிட்டு சென்றார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண் ஓடிவந்து அவரை பார்த்தால் மாயாவி போல் இருக்கிறார். விபூதி கொடுத்து மயக்கி விடப் போகிறார் அந்த விபூதியை சாப்பிட்டு விடாதே என்று கூறினாள். அவள் சொல் கேட்ட இந்தப் பெண்மணியும் அந்த விபூதியை மாட்டுத்தொழுவத்தில் எரியும் நெருப்பில் போட்டு விட்டு கைகளை தட்டி உதவி கொண்டு சென்றாள்.

விதி அவளுக்கு பிள்ளைப்பேறு இல்லாமல் செய்து விட்டது சில காலம் சென்றது மச்சமுனி திரும்ப வந்தார். அந்த பெண்மணியிடம் பாலகன் எங்கே என்று கேட்டார். அந்தப்பெண் தடுமாறி உண்மையை கூறிவிட்டாள். உங்களை மாயாவியாக நினைத்து விபூதியை அடுப்பில் வீசி விட்டேன். அந்த விபூதியும் சாம்பல் சாம்பலாக போனது என்றாள்.

மச்சமுனி அந்த அடுப்பின் எதிரே நின்ற மனம் வருந்தினார். அந்தப் பெண் தாங்கள் கடவுள் அருள் பெற்றவர் என்றால் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க முடியும் என்று கூறினாள்.

மச்சமுனிக்கு இதைக் கேட்டுக் கோபம் வந்தது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும் உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை.

ஆனால் இந்த இடம் அளித்தது நான் சிவசித்தன் என்பது சாத்தியம் ஆனால் இந்த கோவகம் ஒரு கோவகனை தரட்டும். நான் கோருவதால் வரும் பிள்ளை கோமகன் மட்டும் அல்ல மகளும் கூட கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் சாத்தியமாக இருக்கும். அவன் கூட முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனி ஆனது போல என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்தப் பெயர்களை கூறி அழைக்கிறேன் கோரக்கர் முனி அழைக்கிறேன் என்று உணர்ச்சியுடன் அழைத்தார். அந்த சாம்பலில் இருந்து பத்து வயது பாலகனாய் வெளிப்பட்டார் கோரக்கர்!

இப்படி எழுந்து வந்த நாள் ஒரு கார்த்திகை மாத ஆயில்ய நட்சத்திர நாளாகும். மச்சமுனி இல்லற வாழ்க்கை நடத்தும்போது துறவறத்தை மேற்கொண்டவர். அவருக்கு மகனாகப் பிறந்தவர் கோரக்கர் அவரை பிரசித்த வைத்தவுடன் இறந்துபோனார்.

மச்சமுனி பிறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வடக்கு பொய்கைநல்லூர் வந்தார். அங்கு ஒரு குழந்தை பெயர் இல்லாத தம்பதியரிடம் அக்குழந்தையை வளர்க்க ஒப்படைத்தார். அவர்களும் மகிழ்ச்சியுடன் குழந்தையை வளர்க்க சம்மதித்தனர்.

மச்சமுனி அவர்களிடம் அந்த குழந்தைக்கு கோரக்கர் என்ற பெயர் வைத்துள்ளேன். பெயருடன் இந்த குழந்தையை வளருங்கள். இவன் இந்த உலக மக்களுக்கு வரும் நோய்களையும் மனம் வருந்தி வாழும் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் போக்க பிறந்தவன் எனவே தான் கோரக்கர் என்று பெயர் வைத்தேன். நான் தவமிருக்க செல்கிறேன் 12 ஆண்டுகள் கழித்து நான் தவம் முடித்து திரும்பும் போது என் மகன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பினார்.

அந்த தம்பதியினர் தெய்வ பக்தி மிகுந்தவர்கள். அவர்களிடம் வளர்ந்ததால் கோரக்கர் இளம் வயதிலேயே தெய்வப் பற்று அதிகம் பெற்று வளர்ந்தார். அந்த சமயம் சித்தர் காகபுஜண்டர் அங்கு வந்து தங்கி தவம் செய்து கொண்டிருந்தார். அதனால் வடக்கு பொய்யூரில் உள்ள காடு காகபுஜண்ட வனம் என்ற பெயர் பெற்றது. அவரை தரிசிக்க பல சித்தர்கள் சிவனடியார்கள் அங்கு வந்து செல்வது வழக்கம். இதனால் கோரக்கரும் இளவயதிலேயே சித்தர்களிடம் இருப்பு வந்தது. அவரும் அங்கு வரும் சித்தர்களையும் சிவனடியார்களையும் வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்று வந்தார்.
அவர்களுக்கு தேவையான தொண்டுகளையும் செய்து வந்தால் அவர்களிடம் நெருங்கிப் பழகியதால் அவருக்கு தானாகவே யோகமும் ஞானமும் கிடைத்தது. இப்படியும் கோரக்கரின் வரலாறு ஒன்று உள்ளது.

கொல்லிமலையில் பலகாலம் வாழ்ந்த கோரக்கர் உயிர் மருந்துகளையும் கொள்கைகளையும் தயாரித்த அவற்றுடன் தான் அந்த தேவ ரகசியங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி ஏழு பெட்டிகளை உருவாக்கி ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு பொருளாக அடைத்து அவற்றையெல்லாம் கோரக்கர் குண்டம் என்ற ரகசிய இடத்தில் புதைத்து வைத்தார் எனப்படுகிறது.

அது கொல்லி மலையில் உள்ள ஒரு பூந்தோட்டத்தில் உள்ளது என்றும் 18 கை காளியம்மன் கோவில் உள்ளது என்றும் இது காவல் தெய்வமாக இருந்து காக்கிறது என்று நம்பப்படுகிறது.

ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்தப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள் அதை தன்னுடைய குருவிடம் கொடுத்தார். மறுநாள் மச்சேந்திரர் அந்த வடை ருசியாக இருந்தால் மறுபடி அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார்.

கோரக்கர் தான் பிச்சை எடுத்த வீட்டிற்கு சென்று வடை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி இருப்பதை தான் போட முடியும் என்று கோபமாக சொன்னார்.

கோரக்கர் தன் குருவிற்கு வடைதான் கேட்டார் என்றார். உன் குரு உன்னிடம் ஒரு கண்ணை கேட்டால் கொடுப்பாயா என்றாள்? கொடுப்பேன் என்று கூறி, ஒரு கண்ணை பெயர்த்து அவள் கையில் கொடுத்து கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு என்று கூறி கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.

அந்தப் பெண்மணி அவருடைய குரு விசுவாசத்தைக் கண்டு வடை தயாரித்துக் கொடுத்தாள். அதை கோரக்கர் குருநாதரிடம் கொடுத்தார். குரு உன் கண் எங்கே என்று கேட்டதற்கு நடந்த விபரத்தை கூறினார். கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் அவருக்கு திரும்ப அவர்கள் கிடைக்குமாறு செய்தார்.

தன் குருவின் அறியாமை என்ற மாயையை நீக்கி சம்பவம் ஒன்றும் நடந்தது.

மச்சேந்திரர் ஒருமுறை மலையாள நாட்டிற்குச் சென்று அங்கு இளவரசி பிரேமலா என்பவளை மணந்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து. அவனுக்கு மீனநாதன் என பெயர் சூட்டப்பட்டது. கோரக்கர் மலையாள நாட்டிற்கு சென்று குருவை தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல அழைத்தார். அரசி குருவிடம் ஒரு தங்கக் கட்டியை கொடுத்து அனுப்பினார்.

வழியில் மச்சேந்திரர் திருட்டு பயம் உள்ளதா என்று பலரிடம் கேட்டு கொண்டே வந்ததை பார்த்த கோரக்கர் , அவருக்கு தெரியாமல் அவர் வைத்திருந்த தங்க கட்டி எடுத்து வீசிவிட்டு ஒரு கல்லை தங்க கட்டி அந்த இடத்தில் வைத்தார்.

மச்சேந்திரர் வழியில் தன்னுடைய முடிச்சை பார்த்தபோது அங்கு தங்கத்திற்கு பதில் கல் இருந்ததைக் கண்டு கோரக்கர் இடம் அவர் தன் தங்கத்தை அவதரித்ததால் தனக்கு அவர் சீடர் இல்லை என்று கூறி கோபித்துக் கொண்டார்.

உடனே கோரக்கர் அங்கிருந்த ஒரு குன்றின் மீது ஏறி சிறுநீர் கழித்தார். அந்த குன்று முழுதும் தங்கமாக மாறியது . அதில் அவருடைய பொருளை எடுத்துக் கொள்ளக் கூறினார். மச்சேந்திரர் மாயையிலிருந்து விடுபட்டார் எனினும் கோரக்கர் அவரை விட்டு பிரிந்து தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும் காய சித்திகளையும் பெற்றார்.
பின்னர் திருக்கைலாயம் சென்றார். அங்கு அல்லமதேவர் என்பவரை சந்தித்தார். அவரிடம் தாங்கள் யார் என்று கேட்டார். அவர் இறந்து போகும் உடலில் பற்றிக் கொண்டுள்ள வரை மதித்து நான் ஒன்றும் சொல்லவில்லை என்றார்.

கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் என்று கூறினார். ஆனால் அல்லமதேவர் சக்தி பெற்ற உடல் வாழும் நாள் அதிகமாகுமே தவிர அது நிலைத்திருக்காது என்றார். எனவே அழியும் உடலை அழியாமல் என்று கூற முடியாது என்றார்.

கோரக்கர் அல்லமா தேவரிடம் ஒரு கத்தியை கொடுத்து வெட்ட கூறினார். வெட்டிய இடத்தில் வின்வின் என்ற சத்தம் வந்ததை தவிர உடம்பு வெட்டப்படவில்லை. செருக்குடன் அல்லமரை பார்த்தார்.

அல்லமர் இப்போது நீ என் உடலை வெட்டு என்றார். கோரக்கர் வெட்டிய இடத்தில் கத்தி நுழைத்து வெளிப்பட்டதை தவிர வெட்ட படவில்லை காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது.

கோரக்கருக்கு அல்லமரின் சக்தி தெரிந்தது, அவரை வணங்கி பிழையைப் பொறுத்து அருள வேண்டினார். அல்லமர் இனியாவது உடம்பை பற்றிய உண்மை நிலையை தெரிந்து கொள் என்று கூறினார்.

அதுவரை கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்தார். இப்போது தெளிந்தார்.

கோரக்கர் எழுதிய நூல்களில் கோரக்கர் வைப்பு என்ற நூலும் உள்ளது. இது மீன்குஞ்சு வடிவத்தில் மகேந்திரன் கேட்ட தாரகமந்திரம் வேண்டும். இதுவே ஞான சர நூல் என்றும் கூறுகின்றனர். இந்த நூலில் சரவெடி சரண் பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன.

கோரக்கர் தமிழகத்தில் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்தார். இருவரும் நண்பர்களாயினர். இருவரும் தவம் செய்த அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். பிறகு யாகம் செய்யத் துவங்கினர்.

யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும் வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள். யாகத்தைத் தடை செய்ய வந்த அந்த இரண்டு பெண்கள் மீதும் கோரக்கர் தனது கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், மற்றும் பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.

கோரக்கர் மூலிகை கஞ்சா பிரம்ம பத்திரம் புகையிலை பெண்கள் மீது மோகம் கொண்ட அத்தனை அக்னியும் வாயுவும் நெருப்பும் நீரும் செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும் உங்களால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகள் என வரம் தந்து மறைந்தார்.

கோரக்கர் தானறிந்து ஞானத்தை பாடல்களாகப் பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள், கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள்.

இதையறிந்த கோரக்கர் அரிசியுடன் கஞ்சாவை சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படி வைத்தால் வந்த சித்தர்கள் அடையைப் பார்த்து அதை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார்.

சித்தர்கள் மயக்கம் தெளிந்து எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டும் எடுத்து சென்றனர்.

பழனியில் போகர் பாஷாண முருகன் சிலை செய்ய கோரக்கர் உதவினார். பொதுவாக சித்தர்கள் இரண்டு மூன்று இடங்களில் சமாதி ஆவது வழக்கம். அந்தவகையில் கோரக்கர் போரூர், திருகோணமலை, நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள வடக்கு பொய்யூர் ஆகிய இடங்களில் சமாதி அடைந்தார். அவர் இறுதியாக கோரக்பூரில் சமாதியடைந்ததாக வடநாட்டில் கூறப்படுகிறது.

கோரக்கரை வழிபடுவதன் சிறப்பு:

1.ஜாதகத்திலுள்ள சனி தோஷங்கள் விலகும்.
2.செய்யும் காரியங்களில் உள்ள தடை நீங்கும்.
3. மூளையின் மந்த தன்மை நீங்கும்.
4. மாணவ-மாணவிகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
5. நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.
6. எலும்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
7. விவசாயிகளுக்கும் தேவையற்ற மன பயம் போக்கும். தைரியம் ஏற்படும்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page