போகரின் மாணவர் கருவூராரின் வரலாறு!

கருவூரில் பிறந்ததால் கருவூரார் எனப்படுகிறார். இவருடைய பெற்றோர், கோயில்களுக்கு விக்கிரகங்கள் செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அதனால் நிலையாக ஓரிடத்தில் இல்லாமல் , ஊர் ஊராகச் செல்ல வேண்டியிருந்தது. இள வயதிலேயே ஞான நூல்களினால் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்ப்பட்டது.

போகர் சித்தர் திருவாடுதுறை வரும்போது கருவூராரும் அங்கு சென்றார். கருவூரார் போகரிடம் சென்று தன்னை சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டிக்கொண்டார்.

போகர் கருவூராரே ” உன் குலதெய்வம் அம்பாள் ” அம்பாளை தினமும் வழிபடு, அவள் உனக்கு வழி காட்டுவாள்” என்று அவருக்கு அம்பாள் வழிபாட்டு முறைகளை உபதேசித்தார். கருவூராரும் அவ்வாறு அம்பாளை மனமுருகி வழிபட்டார். இதனால் அவருக்கு சித்துக்கள் புரியும் ஞானம் ஏற்பட்டது.

சிவன் ஆலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உருவாக்கி வைத்தார். காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.

இரணிய வர்மன் என்ற அரசன் தீர்த்தயாத்திரை வந்தபோது தில்லை வந்து அங்குள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் குளித்தார். அப்போது தண்ணீருக்குள் ஓங்கார ஓசை கேட்டது மறுபடியும் தண்ணீரில் மூழ்கினார் ஓங்கார ஒலி கேட்பது உறுதிப்படுத்திக் கொண்டார். தான் கண்டதையும் கேட்டதையும் அனைவரும் கேட்க வேண்டுமென்று சொக்கத் தங்கமாக செய்து எல்லோரும் தரிசனம் செய்யும்படி வைக்கலாம் என்று முடிவு செய்தார்.

சிற்பிகளை அழைத்து கலப்படமில்லாத சொக்கத் தங்கத்தில் நடராஜர் சிலையை 48 நாட்களுக்குள் செய்ய ஆணையிட்டார். ஆனால் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் சிற்பிகளால் எவ்வித குறையுமின்றி சிலையை செய்ய முடியவில்லை. அவர்களுக்கு வருத்தமும் அதே நேரம் மன்னரிடம் தண்டனை கிடைக்குமே என்ற மரண பயமும் அதிகமாக ஏற்பட்டது.

சிற்பிகளின் துன்பத்தைக் கண்ட போகர் கருவூரார் இடம் அங்கு சென்று அதை முடிக்க அறிவுறுத்தினார். 48வது நாள் முடிவில் சிற்பிகள் தங்கள் இயலாமையில் மரண பயத்துடன் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தபோது கருவூரார் அங்கு சென்று அவர்களின் துன்பத்தை போக்குவதாக தெரிவித்து சிலை செய்யும் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து கதவை திறந்த வெளி வந்த கருவூரார் வெளியில் காத்திருந்த சிற்பிகளிடம் அரசன் ஆணைப்படி விக்ரகம் செய்து முடிக்கப்பட்டது போய்ப் பாருங்கள் என்றார் .

சிற்பிகள் உள்ளே சென்று பார்த்து அதிசயித்து கருவூராரை மனமுருகி வணங்கினர். சிலையை பார்க்க வந்த மன்னன் அந்த சிலையைப் பார்த்ததும் அதன் அற்புத மொழியில் மயங்கி நின்றார். அதிலிருந்து தோன்றும் அருள் அவரை மிகவும் மகிழ்ச்சியுற செய்தது. சிற்பிகளிடம் அவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுக்கிறேன் என்றார்.

உடனிருந்த அமைச்சர் தங்கத்தின் தரத்தைச் சோதித்து பின் வெகுமதி அளிக்கலாம் என்றார். அதற்கு ஒப்புக்கொண்டு இருக்கும் தங்க துகள்களை சோதனை செய்ய எடுத்துக் கூறினர். பரிசோதித்து சொக்கத் தங்கத்தில் செய்யப்படவில்லை இதில் செம்பும் கலந்து செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தார்.

சிற்பிகளிடம் நான் உங்களிடம் சொக்கத் தங்கத்தில் விக்ரகம் செய்ய சொன்னேன். நீங்கள் செம்பை கலந்து செய்துள்ளீர்கள் அதற்குரிய தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறேன் என்றார்.

சிற்பிகள் பயந்து போய் நடந்ததைக் கூறினர். தங்களால் செய்ய முடியாததை ஒரு சிவனடியார் வந்த செய்து கொடுத்த விபரத்தை கூறி விட்டார்கள்.மன்னர் அவரை அழைத்துவர கூறினார்.

கருவூராரும் வந்தார். மன்னர் காவலர்களை அழைத்து ” இவரை சிறையில் அடையுங்கள்” என்று கூறிவிட்டு விக்ரகத்தை தன்னுடன் கொண்டு சென்றார்கள்.

காவலர்கள் கருவூராரை சிறையில் அடைத்தனர். விக்ரகத்தை பார்த்துக்கொண்டிருந்த மன்னரின் கண்களில் நீர் வழிந்தது. போகர் அவர் எதிரே தோன்றினார். அவர் பின்னால் ஐந்து சீடர்கள் தலையில் தங்கம் உள்ள மூட்டையுடன் நின்றிருந்தனர். ஒன்றும் புரியாமல் மன்னர் அவரைப் பார்த்துக் வணங்கினார்.

மன்னா நீ சிறையிலடைத்து இருக்கும் கருவூரார் என் மாணவன். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் செய்யாத தகுதி அவனுக்கு உள்ளது. அவனை சிறையில் அடைத்து விட்டாய். இதுதான் உனது ஆட்சி முறையா என்றார் .

மன்னர் நான் சொக்கத் தங்கத்தால் விக்கிரகம் செய்ய சொன்னால் அதில் அவர் செம்பை கலந்ததால் தான் அவரின் தண்டனை என்றார். அவர் கூறினார் சொக்கத் தங்கத்தில் விக்கிரகம் செய்ய முடியாது சொக்கத் தங்கத்தில் விக்ரகம் செய்தால் அதிலிருந்து கிளம்பும் ஒளி நாளடைவில் பார்ப்பவர் கண்களை குருடாக்கி விடும் எனவே என் சீடர் அதில் செம்பு சேர்த்து கலக்க சொன்னார்.

இந்த விபரம் உனக்கு தெரியாதா? என் மாணவன் செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளை சேர்த்து செய்திருக்கிறான். அதை விட்டுவிடுவோம். இது நீ விக்ரகம் செய்ய கொடுத்த அளவு சொக்கத்தங்கம் உள்ளது.

இதை நிறுத்துப்பார்த்து பெற்றுக்கொண்டு விக்கிரகத்தை என்னிடம் ஒப்படைத்து விடு என்றார். போகரின் காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரினார். நடராசப் பெருமானை உங்களிடம் தருகிறேன் கருவூராரை என்னிடம் கொடுங்கள் என்றார்.

போகர் அழைக்க கருவூரார் சிறையிலிருந்து வெளியே வந்தார். கருவூரார் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு வைக்கவேண்டும், நடராஜரை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும், எவ் வாறு பூஜை செய்ய வேண்டும், என்பது போன்ற முக்கிய விபரங்களைக் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

தஞ்சையில் சோழ மன்னன் ராஜராஜசோழன் கட்டிய ஆலயத்தில் அஷ்டபந்தன மருந்து பலமுறை சார்த்தப்பட் டும் அது இருகாமல் இளகி கொண்டிருந்தது. அது கண்ட அரசன் செய்வதறியாது வருந்தினான்.

இதனை அறிந்த போகர் ஒரு காக்கையின் கழுத்தில் ஒரு சீட்டை எழுதி கட்டி கருவூராரை தஞ்சைக்கு வருமாறு செய்து எழுதி அனுப்பினார். அதை அறிந்த கருவூரார் தஞ்சை சென்றார். அங்கு அஷ்டபந்தன மருந்தை இருக்கும்படி செய்தார்.

தஞ்சாவூர் ஆலயத்தில் இன்றும் கருவூரார் சிலை உள்ளது. கருவூராரின் புகழ் அதிகமாவதை கொடுக்காமல் சில வேதியர்கள் அவர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னருக்கு அவர் மகான் என்பது தெரியும் எனவே அவரை தண்டிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கருவூராரை கொல்ல ஆயுதங்களுடன் துரத்தினர். அவரும் ஓடி சென்று ஆனிலையப்பர், பசுபதீஸ்வரர் எனக் கூறிக்கொண்டு பசுபதீஸ்வரர் சிவலிங்கத்தை தழுவிக்கொள்ள சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தார்.

கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு உள்ளே கருவூரார் சமாதி உள்ளது.

வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. ஜாதகத்தில் ஏழரை சனி, அட்டமச் சனி, கண்டச் சனியால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.
2. சனிதோஷம் பெரிதாக பாதுகாப்பார்.
3.இந்த தோஷத்தால் ஏற்படக்கூடிய வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்.
4.கல்வியில் மந்த நிலை மாறும்.
5. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
6. எலும்பு சம்பந்தமான கோளாறு நீங்கும்.
7. நல்ல புத்திர பாக்கியம் உண்டாகும்.
8. விவசாயம் இரும்பு வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
9. சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற செய்யும்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page