இட்லி சாம்பார்


தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 கப்பு
துவரம்பருப்பு – 1/2 கப்பு
உருளைக்கிழங்கு – 1
கேரட் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – 2
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை தேவையான அளவு
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
1. குக்கரில் பருப்பைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்கவும்.
2. பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
3. மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
4. குக்கரை மூடி 3-4 விசில் விட வேண்டும்.
5. 4 விசில் பிறகு மூடியைத் திறந்து கிளறவும்.காய்கறிகளையும் பருப்பையும் சிறிது மசித்து விடவேண்டும்.
6. பருப்பு கெட்டியா இருந்தால் சிறிது அளவு சூடான நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
7. கடாயில் எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
8. பெருங்கயம் உலர்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
9. தாளித்த பின் பருப்பில் சேர்க்கவும்.
10. 1 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்..