24th November 2020

மயிலாடுதுறையில், கொரோனா ஊரடங்கால் வேலை இழப்பு- கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – உதவி கலெக்டரிடம் கோரிக்கை

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர், மடப்புரம் கிராமங்களை சேர்ந்த மகளிர் குழுவினர் தாங்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-நாங்கள் கடந்த ஆண்டு தனியார் நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்று முறையாக வட்டியும், அசலும் செலுத்தி வந்துள்ளோம். கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து உணவுக்கு சிரமப்பட்டு வருகிறோம். இதற்கிடையே மத்திய- மாநில அரசுகள், கடன் பெற்றவர்களிடம் தவணைத் தொகை வசூல் செய்வதில் நெருக்கடி தரக்கூடாது என உத்தரவிட்டது.

ஆனால் இந்த அரசின் உத்தரவை மதிக்காமல் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் தினமும் கடன் பெற்ற மகளிர் குழுவினரை கடன் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என மிரட்டி வருகின்றனர். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மட்டுமின்றி ஏழை அப்பாவி மக்கள் பெற்ற தனிநபர் கடனையும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று தனியார் நிதிநிறுவனத்தினர் மிரட்டி வருகின்றனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறுமையில் வாடும் மகளிர் குழுவினரை காப்பாற்றும் வகையில் நுண் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

SOURCE

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts

Leave a Reply