புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி விலக முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக எம்எல்ஏக்கள் 3 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் இருந்தனர். கூட்டணி கட்சியான திமுகவுக்கு 3 எம்எல்ஏக்களும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரளித்து வருகிறார். பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேல் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதி காலியானதை அடுத்து மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 29 ஆக குறைந்தது.

ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது ஜான்குமாரும் பதவி விலகி இருப்பதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 15 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், தற்போது கூட்டணி கட்சி எம்எல்ஏக்களையும் சேர்த்து ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது.

எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என எதிர் கட்சியின் பலம் 14 ஆக உள்ளது. தற்போதைய சூழலில் பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சம பலத்துடன் உள்ளன.

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளதால் அவரது தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts