திருவாவடுதுறை ஆதீனத்தில் வ.உ.சி கொள்ளுப்பேரன் துறவறம் பூண்டார்


இந்திய சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல்,கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வம்சாவழி கொள்ளுப்பேரன் சிவசங்கரன், திருவாவடுதுறை ஆதின மடத்தில் சேர்ந்து துறவரம் பூண்டார் . ஆதீனத்தில் நடைபெற்ற ஆன்மார்த்த மூர்த்தி பூஜையில் 24-வைத்து குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அடியார் சிவ சங்கரனுக்கு கல்லாடை யாத்திரை கஷாயம் கொடுத்து வேலப்ப சுவாமிகள் என்ற தீட்சாநாமம் வழங்கி ஆதினதிருக்கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். வேலப்ப சுவாமிகள் என்று தீட்சா நாமும் பெற்ற சிவசங்கரன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். பிடெக் படித்தவர்.ஆன்மிகத்தின் மீது கொண்ட நாட்டத்தால் ஆதினம் குருமகா சன்னிதானம் ஆசியுடன் இப்பொது துறவறம் ஏற்றுள்ளார்.