மயிலாடுதுறையில்,கூலித் தொழிலாளிக்கு கண் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி செய்த தனியார் தொண்டு நிறுவனம்


மயிலாடுதுறையில், அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பாக பல நற்பணிகளும் தொண்டு சேவைகளும் புரிந்து வருகின்றது. மயிலாடுதுறை மாவட்ட சுற்றுப்பகுதியில் உள்ள பல ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவி செய்து வரும் இந்த அறக்கட்டளையானது மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் மக்களிடம் நல்ல வரவேற்பையும் நற்பெயரையும் பெற்று வருகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கஷ்டப்படும் மக்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப உணவு மற்றும் நிதி உதவி வழங்கி தொண்டாற்றி வருகிறது. அந்த வகையில் ஐயப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை எரவாஞ்சேரி ஊராட்சியில் வசிக்கும் ஏழை கூலி விவசாயியான ரமேஷ்க்கு கண் குறைபாடுகள் தெரிந்து அறுவை சிகிச்சைக்காக கட்டணம் முழுவதையும் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டு அறக்கட்டளை நிறுவனத்தலைவர் அய்யப்பன் சிங்கராசு உதவித்தொகையை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் அய்யப்பன் சிங்கராசு சேவை அறக்கட்டளை தலைமைச் செயலாளர் ஜெயகாந்தன், இணை செயலாளர் ஹலிக்குல் ஜமால் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.