14th April 2021

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு

கடந்த ஜூன் 7ம் தேதி முதல் 22 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. 3 வாரங்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாய் 17 காசுகள் வரையிலும், டீசல் லிட்டருக்கு 11 ரூபாய் 14 காசுகள் வரையிலும் விலை உயர்ந்தன.இந்நிலையில் நேற்றும், இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவில்லை. அதே சமயம் மானியமில்லாத சிலிண்டர் விலை தலைநகர் டெல்லியில் 1 ரூபாய் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களில் ஆங்காங்கு உள்ள விற்பனை மற்றும் மதிப்புக் கூட்டு வரியை பொறுத்து 4 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. அதேபோல் விமானங்களுக்கான எரிபொருள் விலையும் 7.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் விமான எரிபொருள் விலை உயர்வது இது 3வது முறையாகும்.

source

ADVERTISEMENT

Leave a Reply