‘ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!’ – அடங்கா போஸ்டர் பரபரப்பு!!

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையானதையடுத்து நேற்று (08.02.2021) பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நிலையில், சசிகலா இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். சசிகலா விடுதலை ஆகிறார் என்று அறிவிப்பு வெளிவந்தபோதே, அதிமுக நிர்வாகிகள் சிலரும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். அது தொடர்பாக பல்வேறு நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கி இருந்தது. தற்போது வரை இந்தப் போஸ்டர் பரபரப்பு அடங்காத நிலையில், தற்பொழுது திண்டுக்கலில் அமமுக  ஒட்டப்பட்ட போஸ்டர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பான போஸ்டர் திண்டுக்கல் நகர் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது அதிமுக தரப்பு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில்  “ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! மறக்க முடியுமா?  நீங்கள் மறுக்க முடியுமா? இனிதான் வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற வாசகத்துடன் சசிகலா எடப்பாடி பழனிசாமி  தோளைத் தட்டிக் கொடுக்கும் படமும், மற்றொருபுறம் டி.டி.வி.தினகரனுடன் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமுத்தேவர் படத்துடன் கட்சி பொறுப்பாளர்கள் படமும் இடம்பெற்றுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒட்டியுள்ள இந்தப் போஸ்டரை ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பரபரப்பாக நின்று பார்த்து ரசித்துவிட்டு போய் வருகிறார்கள்.

Source: Nakkeeran

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts