17th April 2021

கொரோனா ஒருநாள் பாதிப்பில் மீண்டும் உலக அளவில் இந்தியா முதலிடம் !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 513 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பதிவாகும் உச்சபட்ச கொரோனா பாதிப்பு இதுவாகும். நாட்டின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,447 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஊரடங்கை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு தீவீர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.

புனேவில் வழிபாட்டுத்தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளார். குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை செலுத்திக்கொண்டார்.

ஒடிசாவில் கொரோனா பரவலை அடுத்து 10 நகரங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலால் வரும் 7ம் தேதி முதல் கர்நாடகத்தில் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் உத்தரபிரதேசத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்தில் புதிதாக 3,446 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,96,226-ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 12,764-ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட அளவில் சென்னையில் அதிகபட்சமாக 1,290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 292 பேருக்கும், செங்கல்பட்டில் 285 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில், 81467 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதில் 1,834 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Source : News18 தமிழ்

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts