இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம்


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,87,945லிருந்து 13,36,861ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,209லிருந்து 8,49,432ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,601லிருந்து 31,358ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 757 பேர் உயிரிழந்தனர். சிகிச்சை பெறுவோர் – 4.56 லட்சம், குணமடைந்தோர் – 8.49 லட்சம் பேர். இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது.