25th November 2020

செலவில்லாத சித்த மருத்துவம்- தலைவலி

அகத்தி இலைச் சாறடத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். முள்ளங்கிச் சாறடத்துப் பருகிவந்தால் தலைவலி, ஜலதோஷம், இருமல் ஆகியவை குனமாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகள் ஒவ்வொன்றிலும் ஐந்து கிராம் வீதம் சேர்த்து, தினமும் காலை மாலை வேளைகளில் சாப்பிட்டு  வந்தால், தலைச்சுற்றல்  குணமாகும்.

திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச் சாறு இரண்டையும் கலந்து பச்சைக் கற்புரம் சேர்த்து நாசியில் உறிஞ்சினால் தலைவலி தீரும். வெற்றிலைக் காம்பு, லவங்கம், ஆலரிசி ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து பால் கலந்து சூடாக்கி, நெற்றிப் பொட்டிலும் உச்சந்தலையிலும் தடவினால் தலைவலி குணமாகும்.

சீரகம்,  கொத்தமல்லி. சீந்தில் கொடி ஆகியவற்றைச் சமஅளவு எடுத்துப் பொடி செய்து அவற்றை 300 மில்லி நீரில் போட்டுப் பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடி, திறந்தவெளியில் இரவு முழுவதும் வைக்கவும். காலையில் அதை நன்கு கசக்கிப்  பிழிந்து தண்ணிரை வடிகட்டிக் கற்கண்டு சேர்த்து, காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட்டு  வரவும். ஏத்தகையை தலை சுற்றலையும் குணமாகும்.

விரலி மஞ்சளினை விளக்கணையில் முக்கி விளக்கில் காட்டி அதனைச் சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உறிஞ்சினால் தலைவலி, இதயவலி குணமாகும். நெல்லிக்காயில் கொட்டையை நீக்கிச் சாறு 500 மில்லி லிட்டர் எடுத்து. அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து மூன்று நாள் வெயிலில் காயவைத்து, அதன்பின் தேங்காய் எண்ணெண்யைக் கொதிக்க வைத்துக்கொண்டு அதில் நெல்லிச்சாறு கலந்து கொதிக்கையில் மூக்கில் நுகர தலைவலி அகலும்.

தலை சுற்றல் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் ஒரு அவன்சு நெல்லிக்காய் சாறைக் குடித்தால் சிறது நேரத்திலேயே குணம் கிடைக்கும். பச்சை இஞ்சிச்சாறு, தேன் கலந்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.

கீழாநெல்லி தைலத்தைப் பூசிக் குளித்துவந்தால் தலைசுற்றல்  நிற்கும். குப்பைமேனிச் சாற்றை தலையில் தேய்த்தால் தலைவலி  குணமாகும்.

ஆதண்டை இலைக் கொடியை இடித்து எண்ணெயில் /காய்ச்சி குளித்து வந்தால் கபால வாயு, தலைவலி குணமாகும். மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப் பால்விட்டு அனைத்து பற்று போட்டால், தலைவலி குணமாகும். ஒற்றை தலைவலி ஏற்பட்டால், சீறுநீரை வேர், மிளகு, மஞ்சள் மூன்றையும் நறுக்கி, நல்லணையில் போட்டு காய்ச்சிக் குளித்தால் குணமாகும்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts