26th November 2020

மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவரை ஜாதி ரீதியாக அவமதிப்பு செய்ததற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி கடும் கண்டனம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் :

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவராக 23 வயதுடைய பிரியா பெரியசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று பிரியா பெரியசாமி, மன்னம்பந்தல் கிராம ஊராட்சி துணைத் தலைவராக உள்ள அமலா ராஜகோபால் என்பவர் மீது குற்றம் சாட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் தன் தந்தை பெரிய சாமியுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மன்னம்பந்தல் ஊராட்சியில் பஞ்சாயத்து பொருள்கள் வாங்கும்போது, ஊராட்சித் தலைவருக்கு ரோலிங் சேர் புதிதாக வாங்கப்பட்டது.
அதில் அவரை அமர விடாமல் ஊராட்சித் துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டி சாதாரண நாற்காலியில் உட்கார். இந்த சேரில் அமர உனக்கு என்ன தகுதி இருக்கு என்று ஜாதியை குறிப்பிட்டு தகராறு செய்துள்ளனர். ஊராட்சியில் நடைபெறும் பராமரிப்பு வேலைகளுக்கு கமிஷன் கொடுத்தால் மட்டுமே பில்லில் கையெழுத்துப் போடுவேன் என்று கூறி துணைத்தலைவர் எந்தப் பில்லிலும் கையெழுத்து போடவில்லை. இதனால் ஊராட்சிமன்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, 1வது வார்டு உறுப்பினர் மைதிலியின் கணவர் முருகானந்தம் போதையில் வந்து ஆறு பேருடன் தகாத வார்த்தைகளால் ஊராட்சி மன்ற தலைவரை பேசியுள்ளார். இதுபோன்று தொடர்ந்து அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி ஊராட்சி பணிகளை தொடர்ச்சியாக நடத்த விடாமல் செய்து வருகின்றார்கள்.

இது சம்பந்தமாக மன்னம்பந்தல் கிராம ஊராட்சித் தலைவர் பிரியா, மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் தான் சரவணன் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் ஜாதி ரீதியாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களும் உள்ளாட்சி உறுப்பினர்களும் அவமானப் படுத்தப்பட்டு வருகிறார்கள்.

அதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் கொடுத்த புகாரின் மீது மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சரவணன் நடவடிக்கை எடுத்திருந்தால் தர்ணா செய்ய வேண்டிய பிரச்சனை ஊராட்சித் தலைவருக்கு ஏற்பட்டிருக்காது. நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சரவணனை மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் அணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக ஊராட்சி ஒன்றிய ஆணையர் செயல்பட்டால் நீதிமன்ற கதவுகளை தட்டக் கூடிய சூழல் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜாதி ரீதியாக தமிழகத்தில் அவமானப் படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. உடனடியாக தமிழக அரசு இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உள்ளாட்சி நிர்வாகிகள் நல்ல முறையில் பணியாற்ற அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts