நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 3 ஆண்டுகளில் அதிவேக இணையதள வசதி – பிரதமர் மோடி

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 3 ஆண்டுகளில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தி தரப்பட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய மோடி, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஹை ஸ்பீட் பைபர் ஆப்டிக் டேட்டா இணைப்பு 3 ஆண்டுகளில் ஏற்படுத்தி தரப்பட இருப்பதாக தெரிவித்தார். உலகில் செல்போன் உற்பத்தி செய்ய மிகவும் உகந்த இடமாக இந்தியா உருவெடுத்து வருவதாக கூறிய பிரதமர், உலகிலேயே வேகமாக வளரும் செல்போன் செயலி சந்தையாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். இதேபோல் உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் அழைப்பு கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக அடிக்கடி செல்போன்களையும், பிற மின்னனு சாதனங்களையும் மாற்றும் கலாச்சாரம் மக்களிடையே உருவாகி இருப்பதாக தெரிவித்த மோடி, இதனால் வீணாகும் எலெக்ட்ரானிக் கழிவுகளை கையாளுவது உள்ளிட்டவற்றுக்காக பிரத்யேக அமைப்பை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்தியாவில் திட்டமிட்டபடி 5ஜி சேவை ஆரம்பிக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

SOURCE

More News

திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts