ட்ரோன் நுட்பத்தில் வீட்டுக்குள் பறந்து கண்காணிக்கும் புதிய செக்யூரிட்டி கேமராவை அறிமுகம் செய்தது ரிங் நிறுவனம்


ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறந்து கண்காணிக்கும் புதிய செக்யூரிட்டி கேமராவை, ரிங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டிலோ அலுவலகங்களிலோ ஓரிடத்தில் பொருத்திப் பயன்படுத்துவதே, கண்காணிப்பு கேமிராக்கள். ஆனால் ரிங் நிறுவனம் பறந்து கண்காணிக்கும் பாதுகாப்பு கேமிராவை அறிமுகப்படுத்தியுள்ளது.வீட்டில் இல்லாத நேரத்திலும், கட்டளையிட்டால் ஒவ்வொரு அறையாக பறந்து சென்று கண்காணிப்பை வழங்கும். வீட்டில் ஸ்டவ்வை அணைக்க மறந்துவிட்டோமா, ஜன்னலை திறந்து வைத்து விட்டோமா, கதவை பூட்டி விட்டோமா என்பது போன்ற சாதாரண விஷயங்களை சரிபார்ப்பதற்கு கூட இந்த கேமிராவை பயன்படுத்தலாம். எதன் மீதும் இடித்துக் கொள்ளாமல் பறக்கும் வகையிலான தொழில்நுட்பமும் இந்த கேமிராவில் உள்ளது.இண்டோர் கண்காணிப்பிற்கு பல கேமிராக்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதை ஒரே கேமிராவின் மூலம் செய்வதே, புதிய கருவியின் நோக்கம் என ரிங் நிறுவனத்தின் Jamie Siminoff தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இந்த பறக்கும் கண்காணிப்பு கேமிராவின் விலை $249.99 டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.