விளையாட்டிலும் வாரிசு அரசியலா? – டிரெண்டிங்கில் விவாதம்

மும்பை : ஐபிஎல்., ஏலத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், மும்பை அணிக்காக ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தேர்வானதை வைத்து விளையாட்டிலும் வாரிசு அரசியல் விளையாடுகிறது என்ற வாதம் டுவிட்டரில் ஒலிக்க தொடங்கி உள்ளது. 14வது ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கடைசி நபராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் வந்தார். ஏலத்தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அவரை வேறு எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணியே ஏலத்தில் எடுத்தது. அர்ஜுன் தேர்வானது சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. காரணம் முதல்தர போட்டிகளில் இவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி டிராபியில் கூட ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். மேலும் டுவென்டி-20 போட்டிகளிலும் 2 விக்கெட் மட்டுமே சாய்த்துள்ளார். இதனால் அவர் தேர்வாகி இருப்பது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

More News

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts