தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

இஸ்ரேலில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக வரும் ஞாயிறுமுதல் திறந்தவெளியில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் அரசு கரோனா தடுப்பூசியை மக்களிடையே கொண்டு செல்வதில் வெற்றி அடைந்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை 70% க்கும் மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியை தீவிரப்படுத்தியதன் காரணமாக இஸ்ரேலில் பிப்ரவரி மாதத்திலிருந்தே கரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் 300-க்கும் குறைவானவர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தடுப்பூசி கரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்ட அறிக்கையில், ‘ கரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முகக்கவசங்கள் முக்கிய பாங்காற்றுகின்றன. இந்த நிலையில் நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முகக்கவசம் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வரும் ஞாயிறு முதல் இஸ்ரேலில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்கள் அணிந்து கொள்ளத் தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் பலனளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த மக்களுக்கும் கரோனா தடுப்பூசிகளை செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Source: தி இந்து தமிழ்

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page