26th February 2021

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிடுக: தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் 23-ம் தேதி தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் தொடரில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சந்தைப்பேட்டை நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (பிப். 18) நடைபெற்றது. கூட்டத்துக்கு, மன்றத்தின் மாவட்டச் செயலாளர் .சு.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன், மாவட்டப் பொருளாளர் சு.அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர்மன்றம்நா.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், “பிப்ரவரி 20-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநிலம் தழுவிய தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் மன்ற உறுப்பினர் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும்.

2020-2021 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் மன்ற உறுப்பினர் பட்டியலை மார்ச் 15-க்குள் ஒப்படைக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் 23-ம் தேதி தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் செ.சண்முகநாதன், அந்தோணிமுத்து, துணை தலைவர் சிவா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் .ரவிச்சந்திரன், முத்துவேல், கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More News

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts