ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை போயஸ்தோட்டத்தில் ஜெயலலிதா நினைவில்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் நினைவில்லத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டனர். வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த ஆளுயர குத்து விளக்கை முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டப்பேரவை தலைவர் தனபால், தலைமை செயலாளர், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஏற்றி வைத்தனர். வேதா நிலைய நினைவில்லம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதையடுத்து வீட்டுக்கு வெளியில் உள்ள பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.

விழா முடிந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புறப்பட்டதும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வேதா நிலையம் மூடப்பட்டது. பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். ட்ரோன் மூலம் இயக்கி, ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 24ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

 

Source: Polimer News

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts