நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் காலியாக உள்ள 47 இரவு பாதுகாவலர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் காலியாக உள்ள 47 இரவு பாதுகாவலர் பணியிடங்களுக்கு 62 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திடகாத்திரமான முன்னாள் படை வீரர்கள் சேர விருப்பம் இருப்பின், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலுகத்தினை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பிரவின் பி.நாயர் இ.ஆ.ப. அவர்கள் தகவல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் 47 இரவு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது . தற்போது தொகுப்பூதியம் ரூ.7300/- வழங்கப்பட்டு வருகிறது. காலியாக உள்ள இரவு பாதுகாவலர் பணியிடங்களின் விவரம் பின்வருமாறு. திருக்களாச்சேரி-அ/மி நாகநாதசுவாமி திருக்கோயில், தில்லையாடி கிராமம் – அ/மி சார்ந்தாரை காத்தசுவாமி திருக்கோயில், செம்பனார்கோயில்- அ/மிசு வர்ணபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம் நகர் -அ/மி சட்டநாதஸ்வாமி திருக்கோயில், வெளிப்பாளையம்-அ/மி அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் (ம) அ/மி வரதராஜபெருமாள் திருக்கோயில், இப்பணிக்கு 62 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் சேர விருப்பம் இருப்பின், அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் ந அலுவலகத்தில் தங்கள் பெயரினை நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது exwelngp@tn.gov.in என்ற பின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்திடலாம். மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொலைபேசியில் (04365 253042) தொடர்பு கொண்டு பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பிரவின் பி.நாயர் இ.ஆ.பஅவர்கள் கேட்டு கொண்டுள்ளார்கள்.