25th September 2021

ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தால் போதுமே! 5 நிமிஷத்தில் அற்புதமான புலாவ் செய்து விடலாம்!

பாஸ்மதி ரைஸ் விரும்புபவர்கள் அடிக்கடி கலவை சாதம் செய்து சாப்பிடுவது வழக்கம். உதிரி உதிரியான பாஸ்மதி ரைஸ் கொண்டு செய்யப்படும் எந்த வகையான உணவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு இருக்கக் கூடிய அற்புதமான சுவையுடன் கூடிய இந்த வகையான ஒரு டிஷ் செய்து பாருங்கள். இதற்கு அதிக பட்சம் ஒரே ஒரு குடை மிளகாய் இருந்தாலே போதும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்!

‘குடைமிளகாய் புலாவ்’ செய்யத் தேவையான பொருட்கள்:

பெரிய குடை மிளகாய் – ஒன்று, பாஸ்மதி ரைஸ் – 300 கிராம், சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, பூண்டு – 10 பற்கள், காய்ந்த மிளகாய் – நான்கு, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

‘குடைமிளகாய் புலாவ்’ செய்முறை விளக்கம்:

முதலில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை கழுவி நல்ல தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். கொதிக்கும் உலையில் பாஸ்மதி அரிசியை போட்டு 10 நிமிடத்தில் அடுப்பை அணைத்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள். பாசுமதி அரிசி எந்த அளவிற்கு உதிரி உதிரியாக இருக்கிறதோ! அந்த அளவிற்கு சாதமும் ருசியாக அமையும்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் அடிக்கணமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு கறிவேப்பிலையை கழுவி உருவி போட்டு விடுங்கள். பின்னர் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். வெங்காயம் அதிகம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியமில்லை. பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்குங்கள்.

தக்காளி பாதி வதங்கி வந்ததும் வெட்டி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதற்கிடையில் உரித்து வைத்துள்ள பூண்டு பத்து பல் மற்றும் காம்பு நீக்கிய காய்ந்த மிளகாய் 4 ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் லேசாக தெளித்து அரைத்தால் போதும். அதிகம் தண்ணீர் சேர்த்து விடக்கூடாது. அரைத்த இந்த விழுதை குடை மிளகாய் உடன் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

காய்கறிகள் வெந்து வந்ததும், மசாலாவின் பச்சை வாசம் போனதும் உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அரிசி உடைந்து விடக் கூடாது. அந்த அளவிற்கு பக்குவமாக எல்லா இடங்களிலும் கலவை படும்படி மேலே தூக்கி போட்டு டாஸ் செய்யுங்கள் அல்லது நன்கு கலந்து விடுங்கள். பிறகு விருப்பத்திற்கு ஏற்ப மல்லித்தழை தூவி சூடாகப் பரிமாற வேண்டியது தான். அற்புதமான சுவையுடன் கூடிய இந்த குடைமிளகாய் புலாவ் உடன் தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை! கொஞ்சம் உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்.

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page