காரைக்கால், நாகை, கடலூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் காரைக்கால், நாகை, கடலூர் ஆகிய துறைமுகங்களில் திங்கள்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.காரைக்கால்வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தெற்கு வங்கக் கடல் மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டது. இது மேலும் வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையொட்டி வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் துறைமுகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.நாகைநாகை துறைமுக அலுவலகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது. கன்னியாகுமரிக்கு கிழக்கு, வடகிழக்கே சுமார் 1,120 கிலோ மீட்டர் தொலைவில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 1- ஆம் தேதி( செவ்வாய்க்கிழமை) புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புயல் தூர எச்சரிக்கை கொடியான 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இந்தப் புயலால் நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னை பகுதிகளில் நேரடி பாதிப்பு இருக்காது எனவும், மழை பொழிவு இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.கடலூர் தென்கிழக்கு வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள காற்றழுதத் தாழ்வு மண்டலத்தால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஆழ்கடலில் புயல் உருவாகுவதை குறிப்பதாகும். இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடலூர் மாவட்டத்தில் மழை வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts