20th September 2021

வெள்ளிக்கிழமைதோறும் டெங்கு உலர் நாள் கடைபிடிக்க வேண்டுகோள்

காரைக்கால் மாவட்டம் பருத்திக்குடி அங்கன்வாடி மையத்தில், நலவழித்துறை சார்பில் நடைபெற்ற டெங்கு உலர் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன்

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை மற்றும் தேசிய, பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் ஆகியவற்றின் சார்பில், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம், பருத்திக்குடி அங்கன்வாடி மையத்தில் டெங்கு உலர் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆனந்த், முதுநிலை சுகாதார ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் அமுதா, கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும், டெங்கு உலர் நாளின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் பேசியது, “ மழைக்காலம் தொடங்கும் சூழலில், தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் ஒவ்வொரு

வெள்ளிக்கிழமையன்றும் டெங்கு உலர் நாளாக கடைபிடித்து, தங்களது வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தேவையற்ற பொருட்களான டயர், பிளாஸ்டிக் கப், தேங்காய் மட்டை மற்றும் வீட்டினுள் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் ட்ரே உள்ளிட்ட பொருட்களில் மழை நீர் மற்றும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பகலில் கடிக்கும் கொசு என்பதால் குழந்தைகளுக்கு கைகள், கால்களை மறைக்கும் வகையில் உடை அணிவிக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு சுகாதார நியலத்தை அணுக வேண்டும். இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றார்.

கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்வில் பங்கேற்றோருக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக அங்கன்வாடி ஆசிரியர் பிரதீபா வரவேற்றார். அங்கன்வாடி உதவியாளர் கலையரசி நன்றி கூறினார்.

 

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page