20th September 2021

`கொள்ளிடம் ஆற்றில் கதவணை!’ – முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக டெல்டா பகுதிகளில் மழைப்பொழிவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேலும் மேட்டூர் நீர்பிடிப்பு பகுதியிலும் மழைப்பொழிவு குறைந்ததால் வருடம்தோறும் பாசனத்துக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து போனது.

பெரும்பாலும் வறண்டே இருக்கும் கொள்ளிடம் ஆற்றின் பல இடங்களில் குவாரிகள் அமைத்து, அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் ஆங்காங்கு பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்ளே புகுந்தது. கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டு வரும் தோட்டப்பயிர்களில் தற்போது 90% பயிர்களை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கத்திரி, வெண்டை , மிளகாய், மரவள்ளி கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் செய்து வந்த ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், மல்லிகை, முல்லை, காக்கத்தான், சாமந்தி உள்ளிட்ட பூச்செடிகள் பயிரிடப்படுவதும் குறைந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் உரிய இடங்களில் தடுப்பணை கட்ட கோரி விவசாயிகள் சார்பில் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கடந்த காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது சட்டமன்றத்தில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

“கதவணை கட்டுவதன் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நேரடியாக கடலில் சென்று சேரும் நீரை ஓரளவுக்கு தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். ஆற்றின் கரையோர கிராமங்களிலுள்ள நிலங்கள், உவர் நிலங்களாக மாறுவதை மாற்றி மீண்டும் பயிரிட ஏதுவாக அமையும்.இதன் மூலம் நிலத்தடி நீர் நன்னீராக மாறுவதால் குடிநீர் பற்றாக்குறை தடுக்கப்படும்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் தண்ணீர் நல்ல தண்ணீராக கிடைத்துக் கொண்டே இருக்கும். கொள்ளிடம் கடைமடைப் பகுதியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக மாறியுள்ளது. அந்தத் தரிசு நிலங்கள் மீண்டும் நீர்பாசனம் பெற்று பயிர் சாகுபடி செய்ய ஏதுவாக அமையும். எனவே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page