25th February 2021

திருவண்ணாமலையில் நாளை மறுதினம் குபேர கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலையில் 14 கி.மீ தொலைவுள்ள கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. இதில் 7வது சன்னதியாக குபேர லிங்கம் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் சிவராத்திரியன்று பிரதோஷ காலத்தில் குபேர லிங்கத்தை வழிபட்டு, கிரிவலம் சென்றால், வறுமை நீங்கி வளம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்தாண்டு குபேர கிரிவலம் செல்ல உகந்த நாள் வரும் 13ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், குபேர கிரிவலம் செல்ல கலெக்டர் சந்தீப் நந்தூரி தடை விதித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக குபேர லிங்கம் தரிசனம் மற்றும் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. கோயில் சார்பில் குபேர லிங்க சன்னதியில் வரும் 13ம் தேதி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மகா தீப கொப்பரை திரும்பியது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்தையொட்டி கடந்த மாதம் 29ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் நேற்று முன்தினம் இரவு வரை காட்சியளித்தது. தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை நேற்று காலை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கை சுமையாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிலிருந்து பெறப்படும் தீபச்சுடர் பிரசாதம் (தீப மை), ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பிறகு, பக்தர்களுக்கு வழங்கப்படும்.

SOURCE

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts