திவாலாகிறதா லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

லட்சுமி விலாஸ் வங்கி மீது மத்திய நிதியமைச்சகம் மொரேட்டரியும்(moratorium) கட்டுப்பாடுகள் விதித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் ரிசர்வ் வங்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இப்புதிய திட்டத்தின் படி நிர்வாகம் பிரச்சனையாலும், நிதி நெருக்கடியாலும் மோசமான நிலையில் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்ட வடிவத்தை வெளியிட்டுள்ளது. ஒரு மாத moratorium கட்டுப்பாடுகள் கீழ் லட்சுமி விலாஸ் வங்கி 25,000 ரூபாய்க்கும் அதிகமாகத் தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால், இவ்வங்கியின் வாடிக்கையாளர்களும் முதலீட்டாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய வர்த்தக இணைப்பு வரைவு மக்களின் மத்தியில் இருந்த பீதியை குறைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

DBS வங்கி:

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிக்கையின், நிர்வாகப் பிரச்சனையில் மூழ்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கி DBS பேங்க் இந்தியா உடன் இணைக்கப்படுவதன் மூலம் இக்கூட்டணி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்காகச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான மூலதன நிதியை DBS வங்கி கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் DBS பேங்க் லிமிடெட் -ன் இந்திய கிளை நிறுவனம் தான் இந்த BS பேங்க் இந்தியா.

வலிமையான நிதி நிலைமை:
DBS பேங்க் இந்தியாவின் நிதி நிலைமை மிகவும் வலிமையாக உள்ளது. இந்த வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பதன் மூலம் இருதரப்புக்கும் பெரிய அளவிலான வர்த்தக லாபம் கிடைக்கும். ஜூன்30, 2020 அறிக்கையின் படி DBS பேங்க் இந்தியாவின் மூலதனம் 7,109 கோடி ரூபாய், இதேபோல் இவ்வங்கியின் நகர வராக்கடன் அளவு 2.7 சதவீதம், நெட் வராக்கடன் அளவு 0.5 சதவீதம். இதேபோல் Capital to Risk அளவீடு 15.99% மட்டுமே என்பதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைக்கப் பரிந்துரை செய்துள்ளது.

ஒப்புதல்:
ரிசர்வ் வங்கி தற்போது இரு வங்கிகளுக்கும் இணைப்பதற்கான பரிந்துரையைத் தத்தம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் இரு வங்கிகளும் தங்களது விருப்பம் மற்றும் எதிர்ப்புகளை ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்கும். இரு வங்கிகளும் தனது முடிவை நவம்பர் 20ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts