21st September 2021

மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா: கோயில் வளாகத்திலேயே ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு வரலாற்றிலேயே முதல்முறையாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த மதுரை மக்கள் இந்தாண்டாவது அழகரை பார்த்து விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்த நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தாண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டாலும். ஆகமவிதிப்படி அழகர் கோவில் வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாட்களுக்கு முன் அழகர் கோவில் சித்திரை திருவிழா துவங்கும். அழகர் கோவிலிருந்து தங்க பல்லக்கில் புறப்படும் கள்ளழகர், ஒவ்வொரு மண்டபப்படியாக சென்றுவிட்டு, சித்ரா பௌர்ணமிக்கு முதல் நாள் மூன்றுமாவடி பகுதியிலிருந்து எதிர்சேவை ஆற்றுவார். கள்ளழகரின் எதிர்சேவையால் மதுரையே களைகட்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவையில் பங்கேற்பார்கள். பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பர்.

இந்த எதிர்சேவை நிகழ்ச்சி அழகர் கோவிலில் திங்கள் கிழமை காலை மிக எளிமையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மக்களை சந்திக்க செல்லும் கள்ளழகரை, இந்தாண்டு மக்கள் சந்திக்க சென்ற போதும் பார்க்க முடியாததால் சோகம் அடைந்தனர்.

இதனிடையே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் அழகர் கோவில் வளாகத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை குதிரையில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் மாலை சாற்றுதலை ஏற்றுக்கொண்டு. சம்பிரதாயப்படி ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

அதற்காக அழகர் கோவில் வளாகத்திலேயே வைகை ஆற்றை போன்று செயற்கையான செட் அமைத்து சம்பிரதாயத்திற்கு சிறிதளவு தண்ணீர் நிரப்பி அதில் கள்ளழகர் இறங்க உள்ளார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபம் முடிந்த பிறகு சேஷ வாகனத்தில் அழகர் புறப்பாடும், கருட சேவை மூலம் மண்டுக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்வும் கோவில் வளாகத்திலேயே நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டவது கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலிப்பார் என்ற நம்பிக்கையில் மதுரை மக்கள் காத்திருக்கின்றனர்.

More News

சிதம்பரம் அருகே உள்ள வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு!

admin See author's posts

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!

admin See author's posts

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

You cannot copy content of this page