மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் – கமல்ஹாசன்


மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் தேர்தல் பரப்புரையில் அக்கட்சி தலைவர்
அப்போது பேசிய அவர், தான் பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்வதாக குறிப்பிட்ட அவர், திமுகவை கமல் திட்டவில்லை என்கிறார்கள் ஆனால் தாம் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்வதாக கூறினார்.
திமுக வந்தது எப்படி காலத்தின் கட்டாயமோ, அதுபோல் வெளியே போக வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமே எனக் கூறினார். மேலும் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம் தான் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்