பெட்ரோல் விலை உயர்வைக் கிண்டலடித்த மனோஜ் திவாரி


அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தனது சுட்டுரைப் பதிவில் கருத்துப் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த 9 நாள்களாக தொடர்ச்சியாக விலை உயர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐத் தாண்டி விற்பனையாகி வருகிறது.