மயிலாடுதுறையில் தருமை ஆதீனத்துக்கு சொந்தமான பாழடைந்த மகப்பேறு மருத்துவமனையை ஆய்வு செய்த மடாதிபதிகள்


மயிலாடுதுறை அடுத்து தருமபுரம் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதினம் 27 வது குருமகா சன்னிதானம், ஸ்ரீல ஸ்ரீ கைல மாசிலாமணி தியான பிரம்மச்சரிய சாமிகள் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் இருந்த மகப்பேறு மருத்துவமனை செயல்பாட்டில் இல்லாமலும் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமலும் பாழடைந்து கிடைப்பதை சன்னிதானத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். அதையேற்ற தருமை ஆதினம் மடாதிபதிகள் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மக்கள் பயன்பாட்டிற்கு மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட மயிலாடுதுறை நகராட்சிக்கு வழங்கப்பட்ட இடம் இந்த மகப்பேறு மருத்துவமனை பாழடைந்து கிடைப்பதை கண்ட சன்னிதானம் திரும்பவும் மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனையை புது பொலிவுடன் அமைத்துத் தரப்படும் என்று கூறினார்.