29th November 2020

மயிலாடுதுறை காவல் நிலையம் திருட்டு குற்றங்களை தடுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகள்

  • இரவு நேரங்களில் குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டின் முன்புறம் மற்றும் பின்புறம் நல்ல வெளிச்சமுள்ள மின் விளக்குகளை எரிய விட வேண்டும்.
  • வீட்டில் அனைத்து இடங்களிலும் வீட்டிற்கு வெளியேவும் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த வேண்டும்.
  • வீட்டிற்கு கேஸ் சிலிண்டர், தண்ணீர் கேன், பால், நாளிதழ் இவற்றை கொண்டு வரும் நபர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை பற்றிய விவரங்களை தெரிந்திருக்க வேண்டும்.
    வீட்டினை பூட்டி வெளியூர் செல்ல நேர்ந்தால் காவல்நிலையத்திலும் பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்ய வரும் நபர்களை வீட்டினுள் அனுமதிக்க கூடாது.
    வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் நகைகள் வெளியே தெரியும் வகையில் அணிந்து செல்லக்கூடாது.
  • வீட்டில் உள்ள விலை மதிப்பு மிக்க நகை, பணம் போன்றவற்றை கூடுமானவரை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது.
  • வங்கிகளுக்கு நகை, பணம் ஆகியவற்றை எடுத்து செல்லும் போது கீழே பணம் கிடப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி பொருளை திருட முயற்சி செய்வர் இதனால் கவனம் தேவை. மேலும் தங்களது வாகனங்களில் விலை உயர்ந்த பொருட்களையோ, பணங்களையோ வைத்துவிட்டு செல்ல வேண்டாம்.
  • வங்கிகளிலும் மற்றும் ஏ.டி.எம். -களிலும் பணம் எடுக்க முதியவர்கள் செல்லும் போது கூடுதலாக ஒரு நபரை அழைத்து செல்ல வேண்டும்.
  • தங்களுடைய வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்தாமல் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்.
  • உங்களுடைய ஏ.டி.எம் மற்றும் வங்கி கணக்கு எண்ணை செல்போனில் கேட்டாலும், நேரில் கேட்டாலும் யாரிடமும் கூற வேண்டாம்.
  • திருமணம் மற்றும் கோவில் விழாக்களுக்கு ஆட்டோவிலோ, கால்டாக்ஸிலோ மற்றும் பேருந்துகளிலோ செல்லும் போது வீட்டு விவரங்களையோ மற்றும் வெளியூர் செல்வதையோ மற்றவர்களுக்கு கேட்கும்படி பேச வேண்டாம்.

திருட்டு நடந்தபின் பாதிக்கப்பட்டுவிட்டேன் என்பதை விட முன்போ கவனமாக இருந்து காவல்துறைக்கு உதவினால் எந்த திருட்டுகளையும் நிறுத்திவிடலாம்.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :-
04364 – 222450
04364 – 222010

Leave a Reply