மயிலாடுதுறை தருமபுரம் தருமை ஆதீனத்தில் தை மாத பிரதோஷத்தை ஓட்டி ஸ்ரீ ஞானம்பிக்கை சமேத ஸ்ரீ ஞான புரிஸ்வரர் கோயிலில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் தருமை ஆதீனத்தில் ஸ்ரீ ஞானம்பிக்கை சமேத ஸ்ரீ ஞான புரிஸ்வரர் திருக்கோயிலில் தை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் நந்திபெருமாளுக்கு சிறப்பு ஆபிஷகம் நடைபெற்றது. பின்பு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு தர்ஷினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரதோஷ வழிபாடு செய்தனர். பின்பு நந்தியை பெருமாளுக்கு சிறப்பு புறப்பாடு நடைபெற்றது.