மயிலாடுதுறையில் 121 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட் மூலம் கூடுதலாக 50 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்படும் புதியதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.

மயிலாடுதுறை மாவட்டம் அரசு பெரியார் மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்டை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்பு பேசிய அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் போதுமான செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போர்க்கால அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும். செவிலியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த மாத ஊதியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவருக்கும் ஊதியம் வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். பின்பு 18 புதிய மருத்துவர்கள் மற்றும் 62 செவிலியர்கள் என அனைத்து துறைகளுக்கும் ஒன்றிணைத்து மொத்தம் 121 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் புதியதாக தொடங்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட் மூலம் கூடுதலாக 50 ஆக்சிஜன்களுடன் கூடிய படுக்கை வசதிகள் மேம்படுத்த பட்டுள்ளதாகவும். இதன்மூலம் 70தில் இருந்து 120 படுக்கைகள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்தார் . கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும். இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 54 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐபிஎஸ், மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவர் ராஜசேகர், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன் பொருளாளர் ஜிஎம் ரவி ஒன்றிய ஒன்றிய செயலாளர்கள் நகர மாற்றும் பேரூர் செயலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page